ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!
ராஞ்சியின் ஹார்முவில் உள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் வீடு தற்போது ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்டாக மாறியுள்ளது.
![MS Dhoni HOUSE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/MS-Dhoni-HOUSE.webp)
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது பிறந்த தேதி மற்றும் பிறந்த மாதத்தின் எண் 7 ஆகும். தோனி தனது சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுவார். இந்த நிலையில், ராஞ்சியின் ஹார்முவில் உள்ள தோனியின் வீட்டிலும் 7 என்ற எண் கண்ணாடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், வீட்டிற்கு வெளியே உள்ள பெரிய சுவரில், தோனி விளையாடிய கிரிக்கெட் ஷாட்களையும் விக்கெட் கீப்பிங் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால், தோனியின் வீடு இப்போது ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்டாக மாறிவிட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டில், ஜார்க்கண்ட் மாநில அரசு, ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியத்திலிருந்து தோனிக்கு வீடு கட்ட நிலம் வழங்கியது. இந்த நிலத்தில் தோனி தனது முதல் கனவு இல்லத்தை கட்டினார், அதற்கு அவர் ஷௌர்யா என்று பெயரிட்டார்.
இருப்பினும், தோனி இப்போது ராஞ்சியின் தலைநகரான சிமாலியாவில் ஒரு ஆடம்பரமான பண்ணை வீட்டில் வசிக்கிறார். தோனியின் இந்த வீட்டில் நீச்சல் குளம் முதல் உட்புற அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் வரை பல்வேறு வசதிகள் உள்ளன. தோனி தற்போது தனது குடும்பத்துடன் இங்கு தான் வசிக்கிறார்.
பெரும்பாலும் தோனி தனது ஓய்வு நேரத்தை இந்த பண்ணை வீட்டில் செலவிடுவார். இந்திய அணியின் கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இந்த பண்ணை வீட்டிற்கு வந்து பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.