சேலத்தில் ஐ.பி.எல் நிச்சயம்.. களத்தில் தோனி.!சீனிவாசன் அறிவிப்பு

Default Image

சர்வதேசத்தரத்தில் சேலத்தில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதனாத்தில்  ஐபிஎல் போட்டிகள் நடக்கும் ,தோனி விளையாடுவார் பிசிசிஐ முன்னாள் தலைவர் சினீவாசன் உறுதியளித்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Image

சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மலையடிவார சூழலில் அமைக்கப்பட்ட இந்த கிரிக்கெட் மைதானது ஆனது. 16 ஏக்கர் பரப்பளவு கொண்டது மட்டுமல்லாமல் ஐந்து பிட்ச்சுகளை உள்ளடக்கியுள்ளது இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாகியுள்ள இந்த மைதானம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Image result for seenivasan ipl

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐசிசியின் முன்னாள் தலைவரும் தொழில் அதிபருமான சீனிவாசன் பேசுகையில் முன்னதாக, 14 வயதுக்கு உட்பட்ட மாநில அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி போட்டியும்இம்மைதனாத்தில் நடத்தப்பட்ட உள்ளது. சர்வதேச தரத்தில் அமைந்த இம்மைதானத்தை சுற்றி விரைவில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படும், அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்

Image result for srinivasan

மேலும் தற்போது சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராமசாமி என்று அறிவித்தார் மேலும் அவர் பேசுகையில் விரைவில் இங்கு டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்