பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் “விரைவில் அனைவரையும் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பிலே-ஆப்ஸ் சுற்று, நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, நாளை நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அணியில் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், ஏற்று, இறக்கங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளோம். இது ஒரு யூனிட்டாக எங்களுக்கு ஒரு சிறந்த பயணம் என கூறிய அவர், வெற்றி எங்கள் வழியில் செல்லவில்லை என கூறியுள்ளார். விஷயங்கள் தங்களிடம் செல்லவில்லை எனவும், ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு எங்களை பலப்படுத்துகிறது. விரைவில் அனைவரையும் சந்திப்போம் என பதிவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…