இரண்டாவது டெஸ்ட்:அபார சதம் அடித்த விராட் …!முன்னிலை பெற போராடும் இந்திய அணி …!
இந்திய அணி 93 ஓவர்களில் 251 ரன்கள் அடித்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் ஓரளவிற்கு ஆடி நிதானம் கொடுத்தனர். அடுத்து வந்த ரகானே அரைசதம் அடித்தார்.
இந்நிலையில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் பண்ட் 13*,சமி 0* ரன்களுடன் உள்ளனர்.விராட் 123 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் ,ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 75 ரன்கள் பின்னிலையில் உள்ளது.