இரண்டாவது டெஸ்ட்: இன்று இரண்டாம் நாள் ஆட்டம்…!விக்கெட்டுகளை வீழ்த்துமா இந்திய அணி …!
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்றது .
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சில் இஷாந்த் ,விகாரி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.