#AUSvIND: இன்று இரண்டாவது டி-20 போட்டி ! வெற்றிக்கணக்கை தொடருமா இந்திய அணி ?

Default Image

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ,இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது.

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.இதனைத்தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட முதல் டி-20  போட்டி கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது கான்பெராவின் ஓவன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பந்துவீச்சை பொறுத்தளவில் யாக்கர் மன்னன் நடராஜன் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்களையும், தீபக் சஹர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த தொடரில் தற்பொழுது இந்திய அணி, 0-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே தான் இன்று இரண்டாவது டி -20 போட்டி நடைபெற்று வருகிறது.சிட்னி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இந்த போட்டி  மதியம் 1.40 மணிக்கு நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 அறிமுகமான தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.எனவே நடராஜன் பந்துவீச்சு இன்று நடைபெறும் போட்டியிலும் இந்திய அணிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

முதல் டி-20 போட்டியில் முதல் இன்னிங்ஸில் இறுதி ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்து ரவிந்திர ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டதால் ஜடேஜா காயம் அடைந்தார்.தற்போது, ஜடேஜா சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று பரிந்துரை உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜடேஜாவிற்கு பதிலாகபதிலாக அடுத்து வரும் 20 ஓவர் போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதல் டி-20 போட்டியில் இறுதி நேரத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார்.அவர் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள் விவரம் :

ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் , வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், முகமது ஷமி, நடராஜன்,சைனி,மயங்க் ,மனிஷ் பாண்டே ,சாகல் ,பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்