ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்தது ஸ்காட்லாந்து அணி 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
INDvsBAN :முதலில் பேட்டிங் செய்த இந்தியா 251 ரன்கள் குவிப்பு!
அதிகபட்சமாக ஸ்காட்லாந்து அணி வீரர்களான ஜேமி டங்க் 41 ரன்களும், ஓவன் கோல்ட் 48 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பாக ஃபர்ஹான் அகமது மற்றும் லக் பென்கன்ஸ்டைன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதை தொடர்ந்து 175 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 26.2 ஓவர்களில் 178 ரன்களை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தங்களது உலகக்கோப்பை பயணத்தை தொடங்கினர்.
அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ஜெய்டன் டென்லி 40 ரன்களும், பென் மெக்கின்னி 88 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்கள் மீதம் இருந்த ரன்களை எட்டி அணியை வெற்றி பெற செய்தனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…