டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியும் ஓமான் அணியும் மோதியது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 20-தாவது போட்டியாக இன்று ஓமான் அணியும், ஸ்காட்லாந்து அணியும் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஓமான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணிக்கு, எதிர்பாராத விதமாக நல்ல தொடக்கம் அமையவில்லை அதேநேரம் நல்ல மிடில் ஓவர்களும் அமையவில்லை. ஓரளவுக்கு பவுண்டரி, சிக்ஸர் என சீரான இடைவெளியில் அடித்ததால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தனர். அதிலும் பிரதிக் அதவலே 54 ரன்களும், அயன் கான் 41 ரன்களும் எடுத்தனர்.
மேலும், எளிதான இலக்கான 151 ரன்களை எடுக்க பேட்டிங் களமிறங்கியது ஸ்காட்லாந்து அணி. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் முன்சி (20 பந்துக்கு 41 ரன்கள்) ஓமான் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து பறக்கவிட்டார். அவருடன் ஜோடி சேர்ந்த பிராண்டன் மெக்முல்லனும் (31 பந்துக்கு 61 ரன்கள்) அதிரடியாக விளையாடினார்.
இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றனர். மேலும், இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி இடம்பெற்றுள்ள B-பிரிவில் 5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…