டி20 உலகக்கோப்பை: நமீபியாவை எளிதில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி வெற்றி ..!
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 12-வது போட்டியாக நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் நள்ளிரவு 12.30 மணிக்கு பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய நமீபியா அணி தொடக்கத்தில் சற்று சொதப்பினாலும் அந்த அணியின் கேப்டனான ஹெகார்ட் எராஸ்மஸ் பொறுமையாக நின்று மறுமுனையில் ரன்களை சேகரித்தார். 31 பந்துக்கு 52 ரன்களை எடுத்த அவர் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவருக்கு நமீபியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன்பின் 156 ரன்களை எடுத்தால் வெற்றி என பேட்டிங் களமிறங்கியது ஸ்காட்லாந்து அணி. தொடக்கம் முதலே தேவையான தருணத்தில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர் ஸ்காட்லாந்து அணி பேட்ஸ்மேன்கள்.
ஸ்காட்லாந்து அணியின் கேப்டனான ரிச்சி பெரிங்டனும் (47 ரன்கள்), மைக்கேல் லீஸ்க்கின் (35 ரன்கள்) அதிரடி ஆட்டத்தால் ஸ்காட்லாந்து அணி எந்த ஒரு சரிவையும் காணாமல் எளிதில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம்