டி20I: நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியும் மோதியது.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 35-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் செயின்ட் லூசியா டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியானது ஸ்காட்லாந்து அணிக்கு ஒரு மிகமுக்கிய போட்டியாகும்.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக ப்ரண்டன் மேக்குல்லன் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டை எடுத்து அசத்தி இருந்தார்.
அதனை தொடந்து இலக்கு எட்ட ஆஸ்திரேலியா அணி பேட்டிங் களமிறங்கியது. அதன் படி சற்று தடுமாறினாலும், தக்க நேரத்தில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் (68 ரன்கள்), ஸ்டொய்னிஸ் (59 ரன்கள்) என அடித்ததால் ஆஸ்திரேலியா அணி வெற்றியை பெற்றது.
அதிலும் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், த்ரில்லராக சென்ற அந்த ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதனால், 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 186 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் B பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தால், இங்கிலாந்து அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…