மார்ச் 2023 வரை, இந்தியா விளையாடும் போட்டிக்கான அட்டவணை வெளியீடு.!
இந்திய கிரிக்கெட் அணி, 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை விளையாடவுள்ள போட்டிக்கான அட்டவணை வெளியானது.
2023ஆம் புத்தாண்டு பிறந்துள்ளதையடுத்து, இந்திய அணியின் முதல் 3 மாதங்களில் விளையாடும் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
நியூசிலாந்து அணியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, ஜனவரி 18 முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஜனவரி 27 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலும் விளையாடுகிறது. அதன் பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.