2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை இரண்டு நாடுகளில் அதாவது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. விட்டதை பிடிக்க வேண்டும் என்று இந்தியா உட்பட அனைத்து அணிகளும் வரவுள்ள டி20 உலககோப்பை தொடருக்காக தயாராகி வருகின்றனர்.
நான் எதை தவறவிட்டேன்? ஒரே நாளில் 23 விக்கெட்… நம்ப முடியவில்லை – சச்சின் ஆச்சிரியம்
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வரும் நாட்களில், 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான மார்க்யூ போட்டியின் அட்டவணையை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஜனவரி 8ம் தேதி வெளியிட உள்ளனர். இதில், ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இரண்டு அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி ஜூன் 30ம் தேதியிலும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 அட்டவணை: வாய்ப்பு மட்டுமே…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…