உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 5ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும் 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணியும் மோதும் இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணி விளையாடிய முதல் 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றியை பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. அதைப்போல, நெதர்லாந்து அணி இதற்கு முன்பு பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆகிய அணிகளுடன் மோதிய இரண்டு போட்டிலும் தோல்வி அடைந்துள்ளது.
எனவே, இன்று நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக வெற்றிபெற்று உலகக்கோப்பை போட்டியில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பிலும் விளையாட உள்ளது. இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் ஏழு ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேராக மோதி உள்ளது.
இதில் 6 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியானது சமநிலையில் முடிந்துள்ளது. எனவே 6 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஆட்டத்தில் தோல்வியுற்றதால் இந்த போட்டியில் நெதர்லாந்து அணி விறுவிறுப்பாக வெற்றிபெறவேண்டும் என விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையிலேயே இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மழை பெய்ததன் காரணமாக மைதானத்தில் ஈரமாக இருந்தது. இதன் காரணமாகவே 1.30 மணிக்கு டாஸ் போடும் நேரம் தடைப்பட்டது. இந்த நிலையில் தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தட், பால் வான் மீகெரென்
தென்னாப்பிரிக்கா:
குயின்டன் டி காக்(W), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், லுங்கி என்கிடி, ஜெரால்ட் கோட்ஸி
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…