இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் அரைசதம் விளாசி 60 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ அவுட்டானார். இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 117 ரன்களுக்கு இழந்தது. பின்னர் களமிறங்கிய புஜாரா வந்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாட 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் ரகானே களமிறங்க
இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்து உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 3 விக்கெட் எடுத்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…