#SAvsBAN: பந்து வீச தயாராகும் பங்களாதேஷ்.! பேட்டிங்கில் மிரட்டுமா தென்னாப்பிரிக்கா.?

Published by
செந்தில்குமார்

SAvsBAN : இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 22 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 23வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. இன்று நடைபெறுகிற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகிறது.

இந்த உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடிய நான்கு லீக் ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று உள்ளது. இதில் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி இரண்டு ஆட்டங்களில் 300 ரன்களை தாண்டியும், ஒரு போட்டியில் 400 ரன்களைக் கடந்தும் சாதனை படைத்தது.

ஆனால், பங்களாதேஷ் அணியும் உலக கோப்பை தொடரின் நான்கு லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியுடன் தனது ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ், அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியது. எனவே இந்த போட்டியானது அங்க வங்காளதேச அணிக்கு ஒரு முக்கிய போட்டியாக இருக்கும்.

இந்த இரு அணிகளும் இதுவரை 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 18 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி ஆறு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தைப்  பொருத்தவரை வேகப்பந்து மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் இருவருக்குமே ஏற்றதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேட்டர்கள் நிதானத்தையும் நேரத்தையும் ஒழுங்காக கடைப்பிடித்தால் அதிக ரன்களை பெற முடியும். தற்போது போட்டி தொடங்கிய நிலையில், தான் வெற்றி பெற்ற முதல் மூன்று ஆட்டங்களில் பேட்டிங்கை தேர்வு செய்தது போல இன்றைய ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் நோக்கில் அதிக ரன்களை குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பங்களாதேஷ்:

தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(C), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்

தென்னாப்பிரிக்கா:

குயின்டன் டி காக்(W), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ்

Published by
செந்தில்குமார்

Recent Posts

“நன்றி என்றால் என்னவென்றே தெரியாத தலைவர்”.. எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!!

சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…

8 mins ago

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

12 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

13 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

14 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

15 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

16 hours ago