SAvsAUS: போட்டியின் நடுவே குறுக்கிட்ட மழை.! ஆட்டம் பாதியில் நிறுத்தம்.!

semifinal2

SAvsAUS: இன்று ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் நோக்கில் பலப்பரீச்சை செய்து வருகின்றன.

அதன்படி, இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆனால் இருவரும் வந்த வேகத்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்கள். குயின்டன் மட்டுமே 3 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ராம் இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினாலும், சில நிமிடங்களிலேயே சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இப்போது ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் விளையாடி வருகின்றனர். இருவரும் தலா 10 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், மழைக் குறுக்கிட்டள்ளதால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், மழையால் அவுட்ஃபீல்ட்டும் ஈரமானதால் மாலை 3.55 மணிக்கு ஆட்டம் மீண்டும் தொடங்கும். தற்போதுவரை தென்னாப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்