தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.அதன்பின்னர்,களமிறங்கிய,இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால்,1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து,இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கடந்த 21 ஆம் தேதி பார்ல் நகரில் நடைபெற்றது.இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்தது.
இதையடுத்து,288 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து,7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில்,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிக்கு முன்னதாக தற்போது டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்த போட்டியிலாவது இந்தியா வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்தியா XI: எஸ் தவான், கே எல் ராகுல் (கேப்டன்), வி கோஹ்லி, எஸ் ஐயர், ஆர் பந்த் (விக்கெட் கீப்பர்), எஸ் யாதவ், ஜே யாதவ், பி கிருஷ்ணா, டி சாஹர், ஜே பும்ரா, ஒய் சாஹல்.
தென்னாப்பிரிக்கா XI: கியூ டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மாலன், ஏ மார்க்ராம், ஆர் வான் டெர் டுசென், டி பவுமா (கேப்டன்), டி மில்லர், ஏ பெஹ்லுக்வாயோ, கே மகராஜ், டி பிரிட்டோரியஸ், எஸ் மாகலா, எல் என்கிடி.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…