இன்று வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு.
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இன்று வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் இப்போட்டியில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்தியா (பிளேயிங் லெவன்): கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்): டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், டுவான் ஆலிவியர், லுங்கி என்கிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…