இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னின்னிஸில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டிற்கு 272 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 55 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்துள்ளன.
தென்னாபிரிக்கா சார்பில் லுங்கி என்கிடி 6, ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆரம்பமே விக்கெட்டுகளை மளமளவென இழக்க தொடங்கிய தென்னாபிரிக்கா, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 193 ரன்களில் 8 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணியை விட இந்திய அணி 130 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய ஆணியில் முகமது ஷமி 5, பும்ரா 2, ஷர்துல் தாக்கூர் 2 மற்றும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணியை விட 130 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது. இந்திய அணி தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…