#SAvIND: இறுதி டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் 223 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1 -1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில் இன்று கடைசி போட்டி தொடங்கியது. நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, 3-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை தந்தனர்.
சற்று நிதானமாக விளையாடி வந்த புஜாரா 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் ஒருபுறம் கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால்ம் மறுபுறம் தென்னாபிரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதிகபட்சமாக கோலி 79 ரன்களை அடித்து அவுட்டானார். இறுதியாக 77.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 223 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தளவில் ககிசோ ரபாடா 4, மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.