நான் இதிலிருந்து வெளியேற”சச்சின் தான் காரணம்” முன்னாள் கேப்டன் பரபரப்பு பேட்டி..!!
2 நாட்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்“சர்தார் சிங்” அறிவித்தார். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நேரம் இது. ஹாக்கியைத் தாண்டி உள்ள வாழ்க்கை குறித்து சிந்திக்க இதுவே சரியான தருணம். அதனால் ஒய்வு பெறுகிறேன்” எனக் கூறி ஓய்வை அறிவித்தார்
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் ர்ந்தவர்.இவர் இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று.சுமார் 8 ஆண்டுகள் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த 2016ம் ஆண்டு இவர் கேப்டன் பொறுப்பிலிருந்து திடீரென மாற்றப்பட்டார்.
இந்நிலையில்சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்த பின் சர்தார் சிங் ஆட்டத்திறன் மீது விமர்சனங்கள் எழுந்தன. சர்ச்சையான நிலையில் தான் தன் ஓய்வை அறிவித்தார்.
இதன் பின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நான் காமன்வெல்த் போட்டியில் இருந்து வெளியேறியபோது நான் மிகவும் கவலையாக உணர்ந்தேன். உடனடியாக சச்சினிடம் பேசினேன். அவரிடம் நீங்கள் மோசமாக விளையாடிய போது என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் பதிலளித்தார்.
என்னிடம் நிறைய நேரம் பேசியவர் விமர்சனங்களை மறந்து எப்போவும் போல விளையாடுங்கள் என அறிவுரை கூறினார். மேலும் என்னுடைய வீடியோக்களை போட்டு காண்பித்து ஆட்டத்திறன் குறித்து விவாதித்தார். அவர் அளித்த உத்வேகம், அறிவுரை எனக்கு நிறைய உதவியது. குறிப்பாக அவரின் அறிவுரை எனக்கு நிறையவே கைகொடுத்தது. மோசமான நிலையில் இருந்து என்னை மீண்டு வருவதற்கு உதவிய சச்சின் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்” என உருக்கமாகக் கூறினார்.
DINASUVADU