அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இதனிடையே இன்று மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.இந்த அரங்கத்தில் 1.10 லட்சம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். பழைய விளையாட்டரங்கம் 2016-ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட போது,54,000 பேர் அமரும் வசதி அதில் இருந்தது. புதிய அரங்கத்திற்கான அடிக்கல் 2018-ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தால் நாட்டப்பட்டது.இந்நிலையில் இந்த உலகின் மிகப் பெரிய மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…