கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிசிசிஐ தோனியை சரியான முறையில் நடத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நான் எப்போதும் நேர்மறையான விஷயங்களை பேசுவேன். ஆனால், தற்போது இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பு பிசிசிஐயின் தோல்வி. அவரை போன்ற ஒரு பெரிய வீரர் சரியான வழியில் நடத்தபடவில்லை. தோனியின் ஓய்வு இப்படி நடந்து இருக்க கூடாது. இந்த வார்த்தைகள் எனது இதயத்தில் இருந்து நேராக வருகிறது. அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் நினைத்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். இதற்காக பிசிசிஐக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோனி அடுத்து எடுக்கும் முயற்சிகளுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார். தோனியின் ஒவ்வொரு ரசிகருக்கும் வருத்தம் இருக்கும். அது என்னவென்றால், கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.’ என சாக்லைன் முஷ்டாக் தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…