பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை.! வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.!

Default Image

கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக்  தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிசிசிஐ தோனியை சரியான முறையில் நடத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் எப்போதும் நேர்மறையான விஷயங்களை பேசுவேன். ஆனால், தற்போது இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பு பிசிசிஐயின் தோல்வி. அவரை போன்ற ஒரு பெரிய வீரர் சரியான வழியில் நடத்தபடவில்லை. தோனியின் ஓய்வு இப்படி நடந்து இருக்க கூடாது. இந்த வார்த்தைகள் எனது இதயத்தில் இருந்து நேராக வருகிறது. அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் நினைத்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். இதற்காக பிசிசிஐக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தோனி அடுத்து எடுக்கும் முயற்சிகளுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார். தோனியின் ஒவ்வொரு ரசிகருக்கும் வருத்தம் இருக்கும். அது என்னவென்றால், கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.’ என சாக்லைன் முஷ்டாக்  தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்