மக்கள் என்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள்.! சஞ்சு சாம்சன் பதில்..
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டரான சஞ்சு சாம்சன், மக்கள் தன்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைப்பதாக தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகமான சஞ்சு சாம்சன், 13 ஆட்டங்களில் 55.71 சராசரி மற்றும் 104.00 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 390 ரன்கள் குவித்தார்.
இருந்த போதிலும் தேர்வுக்குழு அவரை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. இதற்கு முன் நடந்த 2023 ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட மூத்த வீரர்கள்..! யார் யார் தெரியுமா..?
இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இருந்து நீக்கப்பட்டதால், சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர். இந்நிலையில், ஏமாற்றமடைந்த ரசிகர்களின் கருத்துகளுக்கு ஒரு யூடியூப் சேனலில் நடந்த பிரத்யேக பேட்டியின் போது சஞ்சு சாம்சன் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “மக்கள் என்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள். ஆனால் தற்போது நான் அடைந்திருக்கக்கூடிய இடம் நான் நினைத்ததை விட அதிகம். இப்படி இருக்கும்போது கூட என்னிடம் வந்து பேசிய நபர் ரோஹித் சர்மா. அவர் என்னிடம் நீங்கள் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டீர்கள்” என்று கூறினார்.
2024 டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும்.! மைக்கேல் வாகன் கணிப்பு..
மேலும், “ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தீர்கள் என சிரித்துக்கொண்டே கூறி, நீங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறீர்கள் என்றார். அவரிடமிருந்து எனக்கு பெரும் ஆதரவு இருந்தது.” என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.