தவானுக்கு காயம்- இளம் வீரர் இந்திய அணியில் சேர்ப்பு
இந்திய அணி வங்கதேச அணியின் சுற்றுப்பயணத்தை அடுத்ததாக மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவதாக டி-20 போட்டியில் இரு அணிகளும் விளையாடுகிறது.முதல் டி-20 போட்டி டிசம்பர் 6 -ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
டி-20 வீரர்கள் விவரம் : விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார்,முகமது சமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த அணியில் இளம் வீரரான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை. வங்கதேச அணியுடன் நடைபெற்ற டி-20 போட்டியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்ற நிலையில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் விலகியுள்ளார்.இதனால் தாவனுக்கு பதிலாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.