”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தப் போகிறார் என்றும், ரியான் பராக் ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பணிகளை மேற்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
கட்டைவிரல் காயம் காரணமாக பேட்டிங் மட்டும் செய்து வந்த நிலையில், இனி விக்கெட் கீப்பிங்கும் செய்யவுள்ளார். இதற்கு முன் சஞ்சுவுக்கு பதில் ரியான் பராக் அணியை வழிநடத்தி வந்தார். ரியான் பராக் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், அந்த அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டு போட்டியில் தோல்வியடைந்தது.
முன்னதாக, மும்பையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது, ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்து சஞ்சுவின் விரலில் பட்டதில் காயம் ஏற்பட்டது. காயம் அவரது வலது கையின் ஆள்காட்டி விரலில் இருந்தது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. பின்னர், விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் தொடர்பான சிஓஇயின் மருத்துவக் குழுவிடம் அனுமதி பெற இந்த வார தொடக்கத்தில் குவஹாத்தியில் இருந்து பெங்களூருக்கு பயணம் செய்திருந்தார்.
இப்பொது, அவர் NCA-வில் இறுதி உடற்பயிற்சி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்,” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இந்த சீசனில் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராக விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் இருந்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படுவார்.