லக்குனா இதுதான் போல ..! கோலி இடத்தில் இனி சஞ்சு தான்…! கம்பிரின் அதிரடி முடிவு?
கவுதம் கம்பிர்: இந்திய அணியில் விராட் கோலி இடத்தில் இனி சஞ்சு சாம்சன் தான் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக கவுதம் கம்பிர் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலுக்காகவே தற்போது இந்திய அணி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இதனால், இந்த டி20 தொடர் முடிந்தவுடன் கவுதம் கம்பிர் தலைமைப்பயிற்சியாளராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இதற்கான நேர்காணல் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு பிசிசிஐக்கு பல நிபந்தனைகளையும் கவுதம் கம்பிர் விதித்துள்ளார் என தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஒவ்வொரு அணியை தேர்வு செய்யவேண்டும் என்பதே ஆகும். அதன்படி நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை விளையாடவுள்ளது.
அந்த தொடரில் கவுதம் கம்பிர் தலைமை பயிற்சியில் இளம் இந்திய அணியுடன் களமிறங்கவுள்ளது. அதில் இந்தியா அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும், துருவ் ஜுரேல் மாற்று விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த அணியில் ஹர்ஷித் ராணா, ரியான் பராக், அபிஷேக் சர்மா போன்ற வீரர்களுக்கும் இடம் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால், சஞ்சு சாம்சன் இந்த அணியில் இடம்பெற்றால் விராட் கோலி 2-வது இடத்திற்கு களமிறங்குவது போல சஞ்சு சாம்சன் 2-வது விக்கெட்டுக்கு இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கீழ் சஞ்சு சாம்சனின் முழு திறமையும் வெளிப்படும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ள நிலையில், ரிஷப் பண்ட் அணியில் முக்கிய விக்கெட் கீப்பராக இருப்பதால், மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இருப்பது குறிப்பிடத்தக்கது.