‘மீண்டும்’ ஜடேஜாவை பகிரங்கமாக கேலி செய்த சஞ்சய் மஞ்ச்ரேகர்..!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தற்போது விளையாடி வருகிறது. இந்தியாவிற்கு கொரோனா ஊரடங்கு பிறகு விளையாடும் முதல் சர்வதேச போட்டியாகும். இந்த இரு அணிகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் போட்டியிட்டனர், இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்த தொடரில் இந்தியா துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை, இதனால், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.
மஞ்ச்ரேகர் விளையாடும் லெவன் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. மஞ்ச்ரேகர் விளையாடும் லெவன் அணியில் ஷிகர் தவான் மற்றும் மாயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், மூன்றாம் இடத்தில் கேப்டன் விராட் கோலி, நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்துள்ளார்.
கே.எல்.ராகுலை ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக மஞ்ச்ரேகர் தேர்வு செய்துள்ளார். ஆறாவது இடத்திற்கு மனிஷ் பாண்டேவையும், ஏழாவது இடத்தில் முகமது ஷமி, எட்டாவது இடத்தில் குல்தீப் யாதவ், 9 வது இடத்தில் சாஹல், 10 வது இடத்தில் பும்ரா, 11 வது இடத்தில் ஷார்துல் தாக்கூர் ஆகியோர் மஞ்ச்ரேகர் தேர்வு செய்துள்ளார்.
குல்தீப் யாதவின் பெயருக்கு பக்கத்தில் விராட் விளையாடும் லெவன் போட்டியில் வீந்திர ஜடேஜாவைத் தேர்ந்தெடுப்பார் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனால், பலர் சமூகவலைத்தளங்களில் மஞ்ச்ரேகர் எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜடேஜா குறித்து மஞ்ச்ரேகர் விமர்சனம் செய்வது இது முதல் முறை அல்ல பல முறை ஜடேஜா விமர்சனம் செய்து சர்ச்சையில் மஞ்ச்ரேகர் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here you go Vaibhav..
Based on the principle of playing specialists –
1- Shikhar
2- Mayank
3- Virat
4- Shreyas
5- Rahul
6- Manish
7- Shami
8- Kuldeep( Virat will pick Jadeja )
9- Chahal
10- Bumrah
11- Shardul/ Saini https://t.co/vFgwF6XliF— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) November 26, 2020