“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்மைப் பெறுவது குறித்து அதிகம் பயிற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில், முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது, அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும் இந்தியா. இந்த நிலையில், 2வது போட்டி, நாளை (பிப்ரவரி 9ஆம் தேதி) ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற உள்ளது.  இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பழைய பார்முக்கு  திரும்ப முடியாமல் திணறி வருகிறார்.

இதற்கு முன், ரஞ்சி தொடரில் ரோஹித் 3 ரன்னில் அவுட்டாகினார். இப்பொது, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 2 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். இந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கப்படவுள்ளது. இந்த சூழலில், இன்னும் அணியின் கேப்டன் ரோஹித் பழைய பார்முக்கு திரும்பவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ரோஹித் சர்மா தனது முந்தைய வெற்றிகளின் போட்டிகளை நினைவு கூர்ந்து, தனது ஃபார்மை மீண்டும் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய பங்கர், அதிகமாக பயிற்சி செய்வது ரோஹித்துக்கு பயனளிக்காது என்று சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலாக, ஷர்மா சிறிது நேரம் தனியாக நேரத்தை செலவழித்து, நீங்கள் வெற்றியை அனுபவித்த போட்டிகளின் ஹைலைட்களில் உங்கள் பழக்கவழக்கங்கள் என்ன என்பதைக் கண்டுபிடிக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

நீங்கள் கடந்தக் காலங்களில் உங்களுக்கு என்ன வேலை செய்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு தற்போதைய நிலையை அவர் அதிகமாக சிந்திக்கக் கூடாது. ரோஹித் தனது சிந்தனையில் மிகவும் நம்பிக்கையற்றவராக இருக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்