முகமது சமியை மணமுடிக்கும் சானியா மிர்சா? இது என்னங்க புது புரளியா இருக்கு!

முகமது சமி: இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார் என்பது நமக்கு தெரியும்.
அதே நேரம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியும் தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்ததும் நமக்கு தெரியும்.
விவகாரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது, கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இதனால், இருவரின் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும், இந்த தகவலை பற்றி இது தொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் என்டிடிவிக்கு ஒரூ பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “இது முற்றிலும் வதந்தியே. இதுவரை முகமது சமியை சானியா மிர்சா சந்தித்தது கூட கிடையாது. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என கூறி இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார்.