ஒருநாள் தொடரில் இருந்து சானியா மிர்சா கணவர் ஓய்வு அறிவிப்பு !

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியில் 1999-ம் ஆண்டு அறிமுகமாகி கடந்த 20 ஆண்டுகளாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சோயிப் மாலிக் தான் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினர்.
Hugs galore
Guard of honour
Plenty of applause
Pakistan gave Shoaib Malik a fitting send-off as he retired from ODI cricket ????#CWC19 pic.twitter.com/ESA4q1sLUM
— ICC Cricket World Cup (@cricketworldcup) July 5, 2019
மேலும் இனிமேல் அதிக நேரம் எனது குடும்பத்துடன் செலவிட முடிவு செய்துள்ளேன் என கூறினார்.சோயிப் மாலிக் நடப்பு உலக கோப்பையில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனார்.ஒரு போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.இதனால் இவரின் ஆட்டத்திற்கு கடும் விமர்சனம் எழுந்தது.
சோயிப் மாலிக் 285 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7534 ரன்களை குவித்துள்ளார்.மேலும் 158 விக்கெட்டை பறித்து உள்ளார்.சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.