விராட் கோலியுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் தேவ்தத் படிக்கல் வெளிப்படுத்தியாக ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்காரா பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்கள் மற்றும் விராட் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தனர்.
இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் விளாசிய தேவ்தத் பட்டிக்கல்லை பலர் பாராட்டி வருகின்றார்கள். அந்த வகையில் போட்டி முடிந்தவுடன் பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்காரா தேவ்தத் பட்டிக்கல்லை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தேவ்தத் படிக்கல் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார், அவரால் விளையாட முடியும் என்று அவருக்குத் தெரிந்த ஷாட்களை அவர் விளையாடினார், களத்தில் அமைக்கப்பட்ட சில பந்துகளை அவர் எதிர்பார்த்தார். அவருடைய ஆட்டத்தில் ஒரு பக்குவாதம் தெரிந்தது. விராட் கோலியுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தேவ்தத் படிக்கல் அடுத்ததாக என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று விராட் கோலியிடம் கேட்டு கொண்டே செயல்பட்டார்” என்றும் பாராட்டியுள்ளார்.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…