ஐபிஎல் 2024 : நடைபெற்ற ராஜஸ்தான்-மும்பை போட்டியில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் 38-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது எதிர்பாராத விதமாக ராஜஸ்தான் அணியின் அபாரமான பந்து வீச்சில் மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
அதன் பிறகு திலக் வர்மாவும், நேகல் வதேராவும் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 45 பந்துக்கு 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்த படியாக நேகல் வதேரா 49 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவர்களைத் தாண்டி மும்பை அணியில் எந்த ஒரு வீரரும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.
இதன் காரணமாக இறுதியில் 20 ஓவருக்கு மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் செய்ய களமிறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் 6 ஓவருக்கு 61 ரன்களை எடுத்தனர்.
பவர்ப்ளே முடிந்த பிறகு மழையின் காரணமாக சிறிது நேரம் ஆட்டம் நடைபெறவில்லை. அதன் பிறகு தொடங்கிய இந்த போட்டியில் ராஜஸ்தான் எங்கும் சரியாமல் ரன்களை குவித்து கொண்டே இருந்தது. அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஜாஸ் பட்லர், பியூஸ் சாவ்லாவின் அபாரமான சூழலில் ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு களம் இறங்கிய அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் தேவையான இடத்தில் பவுண்டரிகள் விளாசி போட்டிய கட்டுக்குள் வைத்திருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வாலும் அதிரடியாக பவுளர்களின் பந்தை பொலங்து கட்டி அரை சதம் கடந்தும் அதிரடி காட்டினார். இந்த ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் அவர் சொதப்பி இருக்கிறார்.
ஆனால் இதுதான் அவரது முதல் அரை சதம் ஆகும். இருவரும் மிக விரைவாகவே இலக்கை எட்டுவதற்கு அதிரடியாக விளையாடினார்கள். இதனால் 18.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்யாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 60 பந்துக்கு 104 ரன்கள் எடுத்திருந்தார், அவருடன் விளையாடிய அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் 28 பந்துக்கு 38 ரன்கள் எடுத்திருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…