சாம்சன் அதிரடி வீணானது.., போராடி டெல்லியிடம் தோற்ற ராஜஸ்தான் அணி..!

Published by
murugan

ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இன்று ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற  இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர்.

தொடக்க வீரர்கள் இருவரும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவரும் கூட்டணி அமைத்து சற்று அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர். சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பண்ட் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் நிதானமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிக்காமல் 43 ரன்களில் விக்கெட்டை இழக்க இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் 154 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் சேத்தன் சகரியா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ராகுல் திவாட்டியா, கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் பறித்தனர். 155 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டோன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் லியாம் 1, ஜெய்ஸ்வால் 5 ரன் எடுத்து பண்ட்டிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் டேவிட் மில்லர், சஞ்சு சாம்சன் களமிறங்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மில்லர் 7 ரன் எடுத்து வெளியேறினார்.

அடுத்து களம்கண்ட ரியான் பராக் 2 , ராகுல் திவாட்டியா 9 , மஹிபால் லோமோர் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இப்போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே சற்று அடித்து விளையாடி அரைச்சதம் எடுத்து 70 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த டெல்லி 16 புள்ளிகள் பெற்று  முதலிடத்திற்கு சென்றது.

Published by
murugan
Tags: DCvRRipl2021

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago