எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்றாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது என்று ஜாஃபர் கூறியுள்ளார்.
இந்திய அணியிலிருந்து எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்று கட்டாயம் வந்தாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடுகிறது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு, பௌலிங் செய்ய 6ஆவது வீரர் தேவை என்பதற்காக சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டு தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமுக ஊடகங்களில் சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் வாசிம் ஜாஃபர், சாம்சன் குறித்து கூறியதாவது; எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்றாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது. ஓப்பனிங்கில் கில் இறங்குகிறார், ரிஷப் பந்த் துணை கேப்டன், ஷ்ரேயஸ் மற்றும் சூர்யகுமார் நல்ல ஃபார்மில் விளையாடுகின்றனர். இதனால் சாம்சன் தான் நீக்கப்படுகிறார். இது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளிக்கும், சாம்சனுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
சாம்சன் திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திறமையை நிரூபித்து வருகிறார். அவருக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும், டி-20 போட்டியிலாவது அவரை தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் என்று ஜாஃபர் கூறியிருக்கிறார்.
ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சாம்சனுக்கு ஆதரவாக பகிர்ந்த டீவீட்டில், ஒருநாள் போட்டியில் சராசரி 60க்கு மேலாக இருந்தும் சாம்சன் தான் அணியிலிருந்து நீக்கப்படுகிறார். வங்கதேச தொடரிலிருந்தும் சாம்சன் நீக்கப்பட்டிருப்பது பற்றியும் கூறியுள்ளார். பயிற்சியாளர், கேப்டன் என யார் மாறினாலும் சாம்சன் அணியிலிருந்து நீக்கப்படுவது மாறவில்லை என கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து இடையே 2ஆவது ஒருநாள் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…