இலங்கையின் சமிக்கா கருணாரத்னே, அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருட தடை.
இலங்கை அணியைச்சேர்ந்த கிரிக்கெட்டர் சமிக்கா கருணாரத்னே, டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகளை மீறியதாகக்கூறி அவருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கருணாரத்னேவிற்கு இந்த ஒருவருட தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 5,000 அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையின் போது கருணாரத்னே, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கருணாரத்னேவின் விதிமீறல்களை விசாரித்த விசாரணைக்குழு, அவர் இது போன்று மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடாதவாறு அவரை கடுமையாகக் கண்டிக்கவும், மேலும் கருணாரத்னே கிரிக்கெட் வாழ்கை பாதிக்காதவாறும் தண்டனை விதிக்க இலங்கை நிர்வாகக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது. நாளை தொடங்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கருணாரத்னே சேர்க்கப்படவில்லை.
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…