ஒரே வீரர் .. ஒரே அணி ..!! 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் யார் யார் தெரியுமா ?
IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம்.
ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஒரே அணியில் இடம்பெற்று விளையாடி வருவது என்பது ஒரு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை, அப்படி விளையாடினாலும் எதிர்பாராத விதமாக வேறு அணியில் இடம் பெரும் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விடும். மேலும், ஒரே அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக 100 போட்டிகளை கடந்து பல வீரர்கள் விளையாடி கொண்டு வருகின்றனர்.
ஆனால், ஒரு வீரராக முதன் முதலில் இடம்பெற்ற அணிக்காக 100 போட்டிகளை விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் பார்க்க போகிறோம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான், மும்பை, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என 8 அணிகள் ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை விளையாடி வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 -ல் இடம் பெற்று 2020 வரை விளையாடிய சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 100 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் ஆவார். அதே போல பெங்களூரு அணிக்காக விராட் கோலி முதன் முதலில் 100-வது ஐபிஎல் போட்டிகளை விளையாடினார். மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இதுவரை எந்த ஒரு வீரரும் தனது 100-வது போட்டியை பதிவு செய்ததில்லை எனபது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணிக்காக 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் :
- சென்னை சூப்பர் கிங்ஸ் – சுரேஷ் ரெய்னா
- மும்பை இந்தியன்ஸ் – ஹர்பஜன் சிங்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோலி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கவுதம் கம்பிர்
- ராஜஸ்தான் ராயல்ஸ் – அஜின்கயா ரஹானே
- சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – புவனேஸ்வர் குமார்
- டெல்லி கேபிட்டல்ஸ் – ரிஷப் பண்ட்