ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மும்பையில் விமானநிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை மக்கள் கூட்டம் கடல் அலை போல் காட்சியளித்து வருகிறது.
ஆனால், வான்கடே மைதானத்தில் தற்போது தீடிரென சற்று முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் மாலை சரியாக 5 மணி அளவில் தொடங்கவிருந்த திறந்த வெளி பேருந்து வெற்றி ஊர்வலமானது சற்று தள்ளி சென்றுள்ளது. இந்நிலையில், விமானநிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை இந்திய ரசிகர்கள், வெற்றி வீரர்களை வரவேற்க குவிந்துள்ளனர்.
அதே நேரம் வான்கடே மைதானம் முழுவதும் ரசிகர்கள் குவிந்து ‘இந்தியா இந்தியா’ எனவும் ‘ரோஹித் ரோஹித்’ எனவும் முழங்கி வருகின்றனர். இதற்கிடையில், மைதானத்த்தில் உள்ள ரசிகர்கள் அதனுடன் ‘ ஹர்திக் ஹர்திக்’ என முழங்கி வருகின்றனர். இது சற்று வியப்படைய வைத்துள்ளது. இதற்கான காரணம் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயலாற்றினார்.
அந்த தொடரில் ஒரு கேப்டனாக அவர் நடந்து கொண்ட முறை அவரது ரசிகர்களையே வெறுப்பேற்றியதென்றே கூறலாம். அந்த தொடரில் மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வான்கடே மைதானத்திலேயே அவரை அவரது ரசிகர்களே அவமானப்படுத்தினார்கள்.
ஆனால் நடைபெற்ற இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அப்படியே அதற்கு மாறாக ஒரு துணை கேப்டனாக பொறுப்புடன் விளையாடி அவரது பங்கை சிறப்பாக ஆற்றினார் ஹர்திக் பாண்டியா. இதனால், அன்று அவரை கேலி செய்த மும்பை மைதானத்திலேயே, அன்று அவரை கேலி செய்த அதே ரசிகர்களே தற்போது ‘ஹர்திக் ஹர்திக்’ என்று முழங்கி அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்த தருணம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…