ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தொடருக்கான மினி ஏலம் (IPL Auction 2024) டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளியில் நடைபெற உள்ளது.
இந்த மாதம் 26-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் எந்தந்த வீரர்களை தக்கவைப்பது, யாரை விடுப்பது என்ற விவரங்களை (IPL 2024 Retention List) வெளியிட உள்ளது. இதற்கிடையில் சில அணிகள் வீரர்களை பரிமாற்றம் (IPL Trade) செய்துள்ளன.
இந்நிலையில், டிசம்பர் 19 ஆம் தேதி மினி ஏலத்திற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹாரி புரூக் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் சாம் கரணை விடுவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஏலத்தில் இவ்விரு வீரர்களும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர்.
ஹாரி புரூக்:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 ஏலத்திற்கு முன்னதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கை விடுவிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தயாராக உள்ளது. ஐபிஎல் 2023 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகளுடன் போட்டி போட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 13.25 கோடிக்கு வாங்கியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூலம் ஐபிஎல்லில் ஹாரி புரூக் அறிமுகமானார். இருப்பினும், ஹாரி புரூக் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. 11 போட்டிகளில் 140 ஸ்டிரைக் ரேட்டில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் ஒரே ஒரு சதம் அடங்கும். இதனால் 2024 ஏலத்திற்க்கான பட்ஜெட்டை கருத்தில் கொண்டு ஹாரி ப்ரூக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஐபிஎல் சீசன்ககளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் நான்கு இடங்களுக்கு தகுதி பெற போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம் கரண்:
2024 ஏலத்திற்கு முன்னதாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் விடுவிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து ரூ. 18.5 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர் தான் சாம் கரண். ஐபிஎல் 2023 இல் 14 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 276 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும், பந்தில் வீச்சில் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. கடந்த தொடரில் 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இது அவரது அணிக்கு மோசமான இழப்பை ஏற்படுத்தியது. இதனால் 2024 ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டு மீண்டும் ஏலத்தில் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் குறைந்த விலையில் வாங்க முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…