என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் பில் சால்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார்.

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர். கடந்த ஆண்டு மட்டும் 12 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 432 ரன்கள் எடுத்திருந்தார். அவர் நல்ல பார்மில் இருப்பதால் அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது. அதன்பிறகு அவுங்க உங்களை விட்டால் என்ன நாங்க இருக்கிறோம் எங்க டீமுக்கு வாங்க என்பது போல பெங்களூர் அணி 11 கோடிகளுக்கு மேல் செலவு செய்து ஏலத்தில் எடுத்தது. இந்த ஆண்டு முதல் போட்டியிலேயே பெங்களூர் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக தான் விளையாடி வருகிறது. எனவே, முன்னாள் அணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு பில் சால்ட் அதிரடி காண்பித்தார் என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், கொல்கத்தா அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழும் வருண் சக்கரவர்த்தி பந்துவீச வந்தவுடனே 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரி என அதிரடி காண்பித்தார். அதன்பிறகு பவர்பிளே ஓவரையும் பக்காவாக பயன்படுத்தி 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இவருடைய அரை சதத்தில் 8 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இவர் அடித்த அரை சதத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரை போய் விட்டுடீங்களா எனவும் இவரை நீங்கள் தக்கவைக்கவில்லை என்ற காரணத்தால் தான் இப்படி விளையாடி இருக்கிறார் எனவும் கூறி வருகிறார்கள்.