ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் எடுத்துள்ளது.

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை விட்டாலும் அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கை வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். சுப்மன் கில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 36, ஷாருக்கான் 36 ஆகியோரும் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் விழுந்தாலும் கூட சரியாக ரன்ரேட் வைத்து விளையாடிய காரணத்தால் அணிக்கு ரன்களும் குவிந்தது என்று சொல்லலாம்.
இவர்கள் ஆட்டமிழந்த போது அணி 163 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ராகுல் தெவாத்தியா, ரஷீத் கான் இருவரும் இருந்த காரணத்தால் நிச்சியமாக 200 ரன்களை குஜராத் கடந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த சமயம், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி ரஷித் கான் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றோரு முனையில் நின்றுகொண்டிருந்த ராகுல் தெவாத்தியா 2 சிக்ஸர் 2 பவுண்டரி என மொத்தம் 24 * ரன்கள் எடுத்தார்.
கடைசி நேரத்தில் தன்னுடைய விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அவர் விளையாடிய காரணத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கவுள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே, மகிஷ் திங்க்ஷன் இருவரும் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.