தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற 5 1/2 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னை நோக்கி வந்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார்.
அன்மையில் உலகமே அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியாவில் பரவிய கட்டுக்கடங்கா காட்டுத் தீக்கு பல உயிர்கள் பலியாகியது.மேலும் பலத்த சேதத்தை அந்நாடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஆஸ்திரேலியா காட்டுக்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்று விளையாடும் போட்டியானது மெல்பர்னில் இன்று நடந்தது.இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் வழி நடத்தும் அணியினுடைய பயிற்சியாளராக சச்சின் செயல்படுகிறார்.
இப்போட்டி நடக்கின்ற இதே மைதானத்தில் தான் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்து அணியோடு விளையாட உள்ளது. இந்நிலையில்ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி, சச்சினை ஒரு ஓவர் விளையாட வருமாறு அழைத்துள்ளார் இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார்
எல்லிஸின் இந்த கோரிக்கையை உடனே ஏற்ற சச்சின் 51/2 ஆண்டு கழித்து மைதானத்தில் களமிரங்கினார் என்ன நீல உடையில்லை அவ்வளவு தான். களமிரங்கிய சச்சின் எல்லிஸ் பெர்ரி வீசிய முதல் பந்தை தனேக்கு உரிய ஷாட்டில் பவுண்டரிக்கு விரட்டினார்.
நீண்ட நாள்களுக்கு பின் மைதானத்தில் சச்சினை பார்த்த ரசிகர்கள் பரவசமடைந்தனர்.அதிலும் அவருடைய ஷாட்டை பார்த்து அட..அட இத தான் காணம இத்தன நாள் இருந்தோம்.. அல்லுதே..தலைவரே என்று புகழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர்…