ஜந்து 1/2 வருடத்திற்கு பின் கையில பேட்..விடுவேனா..விட்டு விளாசிய சச்சின்..அல்லுதே அலறும் ரசிகர்கள்..!வீடியோ உங்களுக்காக

Default Image

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற 5 1/2 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னை நோக்கி வந்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார்.

Image

அன்மையில் உலகமே அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியாவில் பரவிய கட்டுக்கடங்கா காட்டுத் தீக்கு பல உயிர்கள் பலியாகியது.மேலும் பலத்த சேதத்தை அந்நாடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஆஸ்திரேலியா காட்டுக்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்று விளையாடும்  போட்டியானது மெல்பர்னில் இன்று நடந்தது.இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் வழி நடத்தும் அணியினுடைய பயிற்சியாளராக சச்சின் செயல்படுகிறார்.

Image

இப்போட்டி நடக்கின்ற இதே மைதானத்தில் தான் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்து அணியோடு விளையாட உள்ளது. இந்நிலையில்ஆஸ்திரேலிய  பெண்கள் அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி, சச்சினை ஒரு ஓவர் விளையாட வருமாறு அழைத்துள்ளார் இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார்

 

Image

எல்லிஸின் இந்த கோரிக்கையை உடனே ஏற்ற சச்சின் 51/2 ஆண்டு கழித்து மைதானத்தில் களமிரங்கினார் என்ன நீல உடையில்லை அவ்வளவு தான். களமிரங்கிய சச்சின் எல்லிஸ் பெர்ரி வீசிய முதல் பந்தை தனேக்கு உரிய ஷாட்டில் பவுண்டரிக்கு விரட்டினார்.

 

 

நீண்ட நாள்களுக்கு பின் மைதானத்தில் சச்சினை பார்த்த ரசிகர்கள் பரவசமடைந்தனர்.அதிலும் அவருடைய ஷாட்டை பார்த்து அட..அட இத தான் காணம இத்தன நாள் இருந்தோம்.. அல்லுதே..தலைவரே என்று புகழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet
Jitesh Sharma
tvk dhinakaran