வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி சமயத்தில் ஓய்வு அறையில் சச்சின் கண்ணீர் விட்டு அழுதார் – சவ்ரவ் கங்குலி பகிர்ந்த நினைவலைகள்.
கிரிக்கெட் உலகின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர், நல்ல பேட்ஸ்மேனாக ஜொலித்தாலும், நல்ல கேப்டனாக சோபிக்கவில்லை.
இவர், சச்சின் தலைமையில் 1996-97-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த காலகட்டத்தில் தான், முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி புதிய வீரராக அணியில் களமிறங்கியிருந்தார்.
முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி சச்சின் குறித்து சச்சின் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில்,’ வெஸ்ட் இண்டீஸ் அணியுடணான அந்த தொடரில் 4 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. ஒரு பொட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிகொண்டது. இதனால், அந்த அணி 1-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி சமயத்தில் ஓய்வு அறையில் சச்சின் கண்ணீர் விட்டு அழுதார். அந்த ஒரு முறை தான் சச்சின் அழுதார். ‘ என நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும், சச்சின் தன்னிடம், ‘ நீ அணியில் நீடிக்க வேண்டுமென்றால் தினமும் காலையில் எழுந்து ஓட வேண்டும்.’ என கூறியதாக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி குறிப்பிட்டார்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…