இன்றைய இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் இந்திய அணியின் ரோஹித் , சச்சின் இருவரின் சாதனையை முறியடிப்பாரா ?என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது.
ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில் 647 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். ஆனால் ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.இதன் மூலம் நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த 648 ரன்கள் அதிக பட்ச ரன்னாக தற்போது உள்ளது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் டேவிட் வார்னர் 638 ரன்கள் அடித்து உள்ளார். இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் 11 ரன்கள் எடுத்தால் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்து விடுவார்.
மேலும் டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்தால் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் 673 ரன்களை அடித்து இருந்தார்.அதுவே இதுவரை ஒரு உலகக்கோப்பை தொடரில் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது டேவிட் வார்னர் 36 ரன்கள் அடித்தால் சச்சின் சாதனையையும் முறியடித்து விடுவார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…