சுப்மன் கில் அடித்த பவுண்டரி “சச்சின்..சச்சின்” என்று மைதானத்தில் எதிரொலித்தது..!
சுப்மன் கில் பவுண்டரி அடித்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிறிது நேரம் ‘சச்சின்-சச்சின்…’ என்ற கோஷங்களை எழுப்பினர்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும் ரசிகர்களின் மனதில் இன்னும் ஆட்சி செய்து வருகிறார். காரணம் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் காணப்பட்டது.
டிம் சவுதி வீசிய பந்தில் சுப்மன் கில் அனல் பறக்கும் பவுண்டரி அடித்த அந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. அப்போது மைதனத்தில் விராட் கோலியும் களத்தில் இருந்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் 37வது ஓவரின் முதல் பந்தில், சுப்மன் கில் பலமாக அடித்த பந்து புல்லட்டின் வேகத்தில் பவுண்டரிக்கு சென்றது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிறிது நேரம் ‘சச்சின்-சச்சின்…’ என்ற கோஷங்களை எழுப்பினர்.
சச்சின் கடந்த 2013 இல் மும்பை வான்கடே மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது கடைசி டெஸ்டில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மதிய உணவு வரை இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 405 ரன்கள் முன்னிலையில் உள்ளது. மதிய உணவு இடைவேளையின் போது கேப்டன் விராட் கோலி 11* ரன்னிலும், சுப்மன் கில் 17* ரன்னிலும் இருந்தனர்.
மயங்க் அகர்வால் (62), புஜாரா (47) ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், அஜாஸ் படேல் இந்த போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்சில் 119 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Addicric (@addicric) December 5, 2021