88 ஆம் சதத்தில் 30,000 ரன்களை எட்டிய மாஸ்டர் பிளாஸ்டர்!

Default Image

2009 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் தேதியன்று சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்கள் எட்டிய முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்தவர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கிட்டதட்ட 30,000 ரன்களை கடந்துள்ள சச்சின், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தனது 200 டெஸ்ட் போட்டியில் தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்தார். மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 248 ரன்கள் அடித்து, சாதனை படைத்தார்.

மேலும், 463 ஒருநாள் போட்டிகள் விளையாடிய அவர், 18,426 ரன்கள் எடுத்து, 96 அரைசதம், 49 சதங்களை விளாசினார். ஒருநாள் தொடரில் அதிகபட்சமாக 200 ரன்கள் குவித்து, பல விருதுகளை பெற்றார். இந்தநிலையில், 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் தேதியன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 30,000 ரன்கள் எட்டிய முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர், தனது சர்வதேச வாழ்க்கையின் 88 வது சதத்தை அடித்தார். மேலும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தை 34,357 சர்வதேச ரன்கள் மற்றும் 100 சர்வதேச சதங்களுடன் நிறைவு செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்