பாகிஸ்தானிலும் சச்சின் இருக்கிறார் சேவாக் விளக்கம் ..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தொடரின் போது, மொத்த அணியும் ஷாகித் அப்ரீடி குறித்து தான் பேசியது. அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அப்ரீடியின் விளையாட்டு குறித்தும் அவரின் அணுகுமுறை குறித்து விவாதித்தனர். அவர் தான், பாகிஸ்தானின் சச்சின் டெண்டுல்கர் போல இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிச்சயமாக கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும். அப்படியொரு தொடரை இரு நாட்டு ரசிகர்கள் மட்டும் எதிர்பார்க்கவில்லை. இரு நாட்டு வீரர்களும், என்னைப் போல முன்னாள் வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த விவகாரம் குறித்து இரு நாட்டு அரசுகளும் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். எனக்கு பாகிஸ்தானுடன் விளையாடியதில் நிறைய நல்ல நினைவுகள் இருக்கின்றன. 300 ரன்கள் அடித்தது. 200 ரன்கள் அடித்தது என்று நிறைய நினைவுகள் எனது நெஞ்சில் பசுமையாக உள்ளன’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.
DINASUVADU