வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின், பிசிசிஐ இரங்கல்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பி.சந்திரசேகர் மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிசிசிஐ தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
Very sad to hear of the passing away of VB Chandrasekhar. Have fond memories of him. My condolences to his family. ????????
— Sachin Tendulkar (@sachin_rt) August 16, 2019
இது தொடர்பாக கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டரில் ” வி.பி.சந்திரசேகர் இறந்த செய்தியை கேட்க வருத்தமாக உள்ளது.அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
BCCI regrets to inform that former India opener VB Chandrasekhar is no more. Our heartfelt condolences to his family, friends and his fans.
— BCCI (@BCCI) August 15, 2019
இது தொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டரில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வி.பி.சந்திரசேகர் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கல் என பதிவிட்டு உள்ளது.